மலை கிராமத்தில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார் முதல்வர் ஈபிஎஸ்!
மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஏற்காடு கருமந்துறை மலை கிராமத்தில் இருந்து முதல்வர் பழனிசாமி சற்றுமுன் தொடங்கினார். மலைக்கிராம மக்கள் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
முன்னதாக முதல்வர் பழனிசாமி தனக்கு ராசியான கோவிலான வெற்றி விநாயகர் ஆலயத்தில் ஆலய வழிபாடு செய்தார். முதல்கட்டமாக
கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் எல்.கே. சுதீஷை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம் செய்து வருகிறார்.
▪கருந்துறை, புத்தரக் கவுண்டன்பாளையம், வாழப்பாடி, அயோத்தியபட்டணம் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரிக்கும் முதல்வர் தொடர்ந்து சில நாட்கள் பிரச்சாரம் செய்வார் என கூறப்படுகிறது