அதிமுக கூட்டணிக்கு ஜெ.தீபா ஆதரவு!

அதிமுக கூட்டணிக்கு ஜெ.தீபா ஆதரவு!

40 மக்களவை தொகுதிகளிலும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று அறிவித்த தீபா பேரவை திடீரென அதிமுகவுக்கு ஆதரவு என அறிவித்துள்ளது.

தேர்தலில் போட்டியிட கட்சியினர்களிடம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விருப்பமனுவை பெற்ற தீபா, தானும் போட்டியிடுவது குறித்து ஆலோசனை செய்து வருவதாக கூறினார்.

ஆனால் இன்று திடீரென அதிமுக கூட்டணிக்கு தனது பேரவை ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், ‘நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியின் வெற்றிக்கு தனது தொண்டர்கள் பாடுபடுவர்
என்றும் தீபா சற்றுமுன் அறிவித்துள்ளார்.

Leave a Reply