தமிழிசைக்கு மட்டும் செய்ய மாட்டேன்: இயக்குனர் விசு
பாஜக போட்டியிடும் தூத்துகுடி தொகுதி தவிர மீதி நான்கு தொகுதிகளில் பிரச்சாரம் செய்வேன் என்றும், தமிழிசை தொகுதிக்கு மட்டும் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்றும் இயக்குனர் விசு தெரிவித்துள்ளார்.
தான் பாஜகவில் உறுப்பினராகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், ஆனால் இதுவரை எவ்வளவு முயன்றும் ஒருமுறைகூட தமிழிசையை சந்திக்க முடியவில்லை என்றும், இதனால் அவர் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிவித்த விசு, தமிழிசை போட்டியிடும் தொகுதி தவிர மீதி நான்கு தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கும் பிரச்சாரம் செய்வேன் என்றும் இயக்குனர் விசு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் விசுவை சமாதானம் செய்யும் முயற்சியில் தமிழிசை தரப்பினர் ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் அவர் சமாதானம் அடைவார் என்றும் கூறப்படுகிறது.