தமிழக ராணுவ வீரர் சியாச்சின் மலைத்தொடரில் மரணம்
சியாச்சின் மலை தொடர்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் இன்று திடீரென உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள மதுரை மாவட்டம் டி.அரசம்பட்டியை சேர்ந்த பால்பாண்டி என்பவர் சியாச்சின் மலை தொடர்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்காணிப்பு கோபுரத்தின் மீது வீசிய பனிக்காற்றின் காரணமாக தவறி விழுந்தார். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
தம்ழகத்தை சேர்ந்த ராணுவ வீரரின் உயிரிழப்பால் தமிழகமே சோகக்கடலில் மூழ்கியுள்ளது.