மம்தா கட்சிக்கு கமல் ஆதரவு: அந்தமானில் பிரச்சாரம் செய்யவும் முடிவு
தமிழகத்தில் 40 மக்களவை தொகுதிகளிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிடும் கமல்ஹாசன் கட்சி, அகில இந்திய அளவில் மம்தா பானர்ஜியின் கட்சிக்கு ஆதரவு தரவிருப்பதாகவும், அக்கட்சியின் வேட்பாளர்களுக்காக அந்தமான் உள்பட ஒருசில இடங்களில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நேற்று சந்தித்த கமல்ஹாசன் இதனை தெரிவித்தார்., அந்தமான் நிக்கோபாரில் மம்தா பானர்ஜிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறேன். இது ஒருவிதமான கூட்டணி தான். மம்தா பானர்ஜி தமிழ்நாட்டிற்கு பிரச்சாரத்திற்கு வருவாரா என தெரியவில்லை. அவர் வேறு ஒரு கூட்டணியில் இருக்கிறார். எங்களுக்கிடையே உள்ள நட்பினால் பிரச்சாரம்’ என்று கமல் கூறியுள்ளார்.
கமல் கட்சியின் வேட்பாளர்கள் டெபாசிட் வாங்குவார்களா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ள நிலையில் கமல் மாற்றுகட்சிக்கு பிரச்சாரம் செய்ய முடிவெடுத்துள்ளதை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.