சூப்பர் டீலக்ஸ்: விஜய்சேதுபதி வெறும் 40 நிமிடங்கள் மட்டும்தானா
விஜய்சேதுபதி நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே தோன்றும் காட்சிகளில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் ரன்னிங் டைம் சுமார் 3 மணி நேரம் என்ற நிலையில் அதில் மூன்று ஒரு பகுதி கூட விஜய்சேதுபதியின் காட்சிகள் இல்லை என்பது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.
இதேபோல் ‘சீதக்காதி’ படத்திலும் விஜய்சேதுபதி முதல் அரை மணி நேரம் மட்டுமே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விஜய்சேதுபதி நடித்த காட்சிகள் 40 நிமிடங்கள் மட்டுமே என்பதை படக்குழுவினர் இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது