கெட்டுப்போன ரத்தம்: தாமாக முன் வந்து விசாரணை செய்யும் மனித உரிமைகள் ஆணையம்

கெட்டுப்போன ரத்தம்: தாமாக முன் வந்து விசாரணை செய்யும் மனித உரிமைகள் ஆணையம்

“தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் கெட்டுப்போன ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் 15 பேர் இறந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் கெட்டுப்போன ரத்தம் செலுத்திய வழக்கை தாமாக முன் வந்து விசாரணைக்கு விசாரணைக்கு ஏற்றது மனித உரிமைகள் ஆணையம்

இதுகுறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் திட்ட இயக்குனரும் 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் கெட்டுப்போன ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையின் கட்டமைப்பு சீர்குலைவே காரணம் என்றும், இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலக வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply