ஆன்லைன் மூலம் ஆற்றுமணல் விற்பனை: மணல் லாரி உரிமையாளர்கள் புகார்
ஆன்லைன் மூலம் ஆற்றுமணல் விற்பனை செய்வதை அரசு நிறுத்தக் கூடாது என்றும் ஆற்றுமணல் விற்பனையை நிறுத்துவதால் தமிழகம் முழுவதும் கட்டுமான பணிகள் முடங்கி உள்ளதாகவும் மணல் லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை காரணம் காட்டி ஆன்லைனில் ஆற்று மணல் விற்பனை செய்வதை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு மணல் லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தேர்தல் காலமாக இருந்தாலும் ஆன்லைன் மூலம் ஆற்றுமணல் விற்பனை செய்வதை அரசு தொடர வேண்டும் என்றும் மணல் லாரி உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.