185 பேர் போட்டி: முதல்வர் மகள் தொகுதியில் வாக்குச்சீட்டு முறை

185 பேர் போட்டி: முதல்வர் மகள் தொகுதியில் வாக்குச்சீட்டு முறை

தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகரராவ் அவர்களின் மகள் கவிதா போட்டியிடும் நிசாமாபாத் தொகுதியில் 178 விவசாயிகள் உள்பட மொத்தம் 185 பேர் போட்டியிடுவதால் அங்கு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த தொகுதியில் வாக்குச்சீட்டு முறையின்படி தேர்தல் நடைபெறும் என தெரிகிறது.

தெலங்கானாவில் மஞ்சள் பயிருக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்காததால் அதிருப்தியடைந்த விவசாயிகள் ஆயிரம் பேர், அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா போட்டியிடும் நிசாமாபாத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். ஆனால் ஆயிரம் பேர்களில் 178 விவசாயிகள் மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே இவர்களுடன் சேர்ந்து இந்த தொகுதியில் மொத்தம் 185 பேர் போட்டியிடுவதால் இந்த தொகுதியில் வாக்குச்சீட்டு முறையின்படி தேர்தல் நடைபெறவுள்ளது

Leave a Reply