நான் பேச ஆரம்பித்தால் துரைமுருகன் தூங்க மாட்டார். ஏ.சி.சண்முகம்

நான் பேச ஆரம்பித்தால் துரைமுருகன் தூங்க மாட்டார். ஏ.சி.சண்முகம்

அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதியை பெற்றுள்ள ஏ.சி.சண்முகம், நேற்று துரைமுருகன் வீட்டில் நடந்த வருமான வரித்துறையினர்களின் சோதனை குறித்து கூறியதாவது:

துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று உள்ளது. இதற்கு நானும் பா.ஜனதா கட்சியும் தான் காரணம் என்று துரைமுருகன் கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய். சென்ற மாதம் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடந்தது. நாங்கள் யார் மேலேயும் பழி போடவில்லை.

அண்ணன் துரைமுருகன் மீது மிகுந்த மரியாதை கொண்டவன் நான். அரசியல் நாகரிகம் கருதி நான் இதுவரை எதுவும் பேசவில்லை. நான் பேச ஆரம்பித்தால் துரைமுருகன் ஒரு மாதம் தூங்க மாட்டார்.

இவர்களுக்கு எந்த நாட்டில் என்ன உள்ளது என்பதை நான் சொல்ல வேண்டியதாக இருக்கும்.

பொதுவாக இந்த ரெய்டு எல்லாம் ஒருவர் போனில் பேசுவதை வைத்து தான் உளவுத்துறை மூலம் அறிந்து சோதனை நடைபெறும். இது கூட தெரியாமல் அடுத்தவர் மீது பழிபோடுவது மிக தவறு.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply