60 வயது கேரக்டர்களில் 30 வயது நடிகைகள்
பொதுவாக நடிகைகள் வயது குறைந்த வேடத்தில் மட்டுமே நடித்து வருவார்கள். ஆனால் ஒரு படத்தில் முப்பது வயதை உடைய பிரபல நடிகைகள் இருவர் 60 வயது தோற்றத்தில் நடிக்கவுள்ளனர்.
உபி மாநிலத்தை சேர்ந்த சந்த்ரோ டோமர், பிரகாஷி டோமர் ஆகிய இருவரும் ரிவால்வர் துப்பாக்கியால் எந்த இலக்கையும் குறிதவறாமல் சுடுவதில் கில்லாடிகள். இவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ‘சாந்த் கி ஆங்க்’ பெயரில் திரைப்படம் உருவாகி வருகிறது.
இதில் பிரகாஷி டோமர் கதாபாத்திரத்தில் பூமி பெடுன்கர் அவர்களும், சந்த்ரோ டோமர் கதாபாத்திரத்தில் டாப்சியும் நடிக்கின்றனர். பூமி பெடுன்கர், டாப்சி ஆகிய இருவருக்குமே 30 வயதுதான் ஆகும் நிலையில் இருவரும் 60 வயது கதாபாத்திரத்தில் துணிந்து நடிக்கின்றனர்.
இதுகுறித்து நடிகை டாப்சி கூறும்போது,’60 வயது பெண்ணாக சந்த்ரோ டோமர் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். நான் இதுவரை நடித்த வேடங்களிலேயே இது மிகவும் சவாலானது. கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தகுந்த பயிற்சி தேவைப்பட்டதால் சந்த்ரோ டோரை நேரில் சந்தித்து பயிற்சி பெற்றேன் என்றார்.