சுலோவாகியா: முதல்முறையாக அதிபராகும் பெண்
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுலோவாகியா நாட்டின் அதிபராக ஜூஜூனா கபுடோவா என்ற பெண்மணி தேர்வு பெற்றுள்ளார். இந்த நாட்டில் பெண் ஒருவர் அதிபர் ஆவது, இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது
சுலோவாகியா நாட்டில் அதிபர் பதவிக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் மாரோஸ் செப்கோவியும், அவரை எதிர்த்து ஜூஜூனா கபுடோவாவும் போட்டியிட்டனர்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது ஊழலுக்கு எதிரான பெண் என்ற கோஷத்துடன் தேர்தலில் பங்கேற்ற ஜூஜூனாவுக்கு 58 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜூஜூனா விரைவில் அதிபர் பொறுப்பை ஏற்கவுள்ளார்.