துரைமுருகனுக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் சோதனை! மூட்டை மூட்டையாக சிக்கிய பணம்!….
துரைமுருகன் மகன் மற்றும் திமுக பிரமுகர்களுக்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரி சோதனை நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது
▪வேலூர், காட்பாடி, பள்ளிக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் 30 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும், சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் வேலூரில் சிமெண்ட் குடோனில் வார்டு வாரியாக எழுதப்பட்டு, பணம் பார்சல் செய்து சாக்குப்பையில் அடைக்கப்பட்டு பதுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அண்மையில் சோதனையில் சிக்கிய துரைமுருகன் குடும்பத்திற்கும் இதற்கும் தொடர்புள்ளாதா? என விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது
வேலூர் மக்களவை தொகுதியில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது