பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடை இல்லை: டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு

பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடை இல்லை: டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு

பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடைகோரி வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது. இந்த படம் தேர்தல் நேரத்தில் வெளியிடுவது விதிமீறல் என்று அந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது

இந்த நிலையில் தொடுக்கப்பட்டது பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடை இல்லை என்று கூறிய டெல்லி ஐகோர்ட், வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இதனையடுத்து திட்டமிட்டபடி இந்த படம் வெளியாகும் என தெரிகிறது

பி.எம்.நரேந்திர மோடி படத்தில் நடிகர் விவேக் ஓபராய் நரேந்திர மோடியாக நடித்துள்ளார். பிரியங்கா சோப்ரா நடித்த மேரி கோம் படத்தை இயக்கிய ஓமங் குமார், இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் மோடி டீ விற்பது, போராடி சிறை சென்றது, நடுரோட்டில் குளிரில் உறங்கிக்கிடப்பது போன்ற காட்சிகள் டிரெய்லரில் வெளியாகியுள்ளன. இந்தப் படம் மாதம் ஏப்ரல் 6-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply