ஒன்னு பொன்னார், இன்னொரு யார்? அமித்ஷாவிடம் கேள்வி கேட்ட நெட்டிசன்கள்

ஒன்னு பொன்னார், இன்னொரு யார்? அமித்ஷாவிடம் கேள்வி கேட்ட நெட்டிசன்கள்

பாஜக அரசு தமிழகத்திற்கு இரண்டு மத்திய அமைச்சர்களை கொடுத்துள்ளது. பாஜக கூட்டணி தமிழகத்தில் 30 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு சொல்கிறது

“கடந்த 5 ஆண்டுகளை போன்று, அடுத்த 5 ஆண்டுகளுக்கும் பாஜக சிறப்பான ஆட்சியை வழங்கும்!. தமிழிசை சவுந்தரராஜனுக்கு உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை

பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தனை நினைத்து இந்த கூட்டத்தில் உரையாற்றுகிறேன். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மக்களும் மோடியை
பிரதமராக்க வேண்டும் என விரும்புகின்றனர்

இவ்வாறு தூத்துக்குடி சங்கரப்பேரியில் அதிமுக-பாஜக கூட்டணி பரப்புரை கூட்டத்தில் அமித்ஷா பேசினார்.

அமித்ஷாவின் பேச்சை கேட்ட நெட்டிசன்கள் ஒன்று பொன்.ராதாகிருஷ்ணன், இன்னொரு மத்திய அமைச்சர் யார்? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply