மெஹந்தி சர்க்கஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு
‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான ராஜூமுருகன் கதை வசனத்தில் அவரது சகோதரர் ராஜூ சரவணன் இயக்கிய திரைப்படம் ‘மெஹந்தி சர்க்கஸ்’. இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 19 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுளது
சர்க்கஸை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு சீன் ராடன் இசை அமைத்துள்ளார். செல்வகுமார் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ் குமார் கலை இயக்கத்தில், பில்ல ஜெகன் ஸ்டண்ட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.