நீட் தேர்வு ரத்து என்ற அறிக்கை ஏமாற்று வேலை: அமைச்சர் ஜெயகுமார்
நேற்று வெளியான காங்கிரஸ் கட்சியின் அறிக்கையில் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் மாநில அளவில் நுழைவுத்தேர்வு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அரசியல்வாதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அரைத்த மாவையே அரைத்து கொண்டிருக்கின்றனர்.
நீட் தேர்வு குறித்து அந்தந்த மாநிலமே முடிவு செய்து கொள்ளலாம் என கூறியிருப்பது மக்களை ஏமாற்றும் செயல். நீட் தேர்வை கொண்டு வர வேண்டும் என்று கொள்கை முடிவு எடுத்ததே காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி ஆட்சியில் தான் என குற்றம் சாட்டினார்.
மேலும் நீட் தேர்விலேயே நல்ல மதிப்பெண்கள் பெறும் சி.பி.எஸ்.இ மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற்று பெரும்பாலான மெடிக்கல் சீட்டுக்களை அள்ளி சென்றுவிடுவார்கள் என்று சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.