5 சவரம் வரை தங்கநகைக்கடன் தள்ளுபடி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் 5 சவரன் வரை விவசாயிகள் பெற்ற கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு சிறு விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வங்கி நிர்வாகிகள் இந்த அறிவிப்புக்கு அதிருப்தியை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
திமுக தலைவரின் இந்த அறிவிப்பு தேர்தல் அறிக்கையிலும் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது