வீரபாண்டி ஆறுமுகம் மீதான வழக்கு ரத்து
திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான நிலமோசடி வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வீரபாண்டி ஆறுமுகம் மகன் மற்றும் 14 பேர் மீதான நிலமோசடி வழக்கும் ரத்து செய்யப்பட்டது.
தேர்தல் நேரத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவரது மகன் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது திமுகவுக்கு சாதகமான அம்சமாகவே கருதப்படுகிறது. இதனால் திமுக உற்சாகமாக உள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு வீரபாண்டி ஆறுமுகம் காலமாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது