மோடியாலும் டாடியாலும் அதிமுகவை காப்பாற்ற முடியாது: தினகரன்
வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கி தீவிர பிரச்சாரம் செய்து வரும் அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் இன்று பொள்ளாச்சி அமமுக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து பேசியதாவது:
பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஜெயலலிதா இருந்திருந்தால் இந்நேரம் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருப்பார். ஆனால் இப்போது இவ்வழக்கில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் தலையீடு உள்ளதால் காவல்துறையினர் மூடி மறைக்கப் பார்க்கின்றனர். தமிழகமே அதிர்ச்சியில் உறைந்த இந்த சம்பவத்தை பற்றி முதல்-அமைச்சர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை
18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் , அதிமுக 8 இடங்களில் வெற்றி பெறாவிட்டால், தமிழகத்தில் இப்போது உள்ள ஆட்சியை பிரதமர் மோடி அல்ல அவரது டாடி வந்தாலும் காப்பாற்ற முடியாது’ என்று தினகரன் பேசினார்