மொழிபெயர்ப்பு புகழ் தங்கபாலுவுக்கு ராகுல்காந்தி கொடுத்த புதிய பொறுப்பு
சமீபத்தில் ராகுல்காந்தி தமிழகம் வந்தபோது அவரது பேச்சை மொழிபெயர்த்து சர்ச்சையில் சிக்கியவர் தங்கபாலு. இவருக்கு தற்போது வயநாடு தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பதவியை ராகுல்காந்தி அளித்துள்ளார்.
வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடவுள்ளார். இன்று இந்த தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்தார். அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் உடன் இருந்தனர்.
தேர்தல் பொறுப்பாளர் பதவி பெற்ற தங்கபாலு, ராகுல்காந்தியை வெற்றி பெற வைக்க என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்போம்