என் சகோதரர், என்னுடைய நெருங்கிய நண்பர்: ராகுலை வாழ்த்திய பிரியங்கா
என் சகோதரர், என்னுடைய நெருங்கிய நண்பர் என்றும் எனக்கு தெரிந்த நபர்களில் மிகவும் தைரியமானவர் என்னுடைய சகோதரர் ராகுல்காந்தி என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் வயநாடு மக்களே அவரை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள், அவர் உங்களை என்றும் கைவிடமாட்டார் என்றும் ராகுலை பிரியங்கா டிவிட்டரில் வாழ்த்தினார்
பிரியங்கா காந்தியின் இந்த டுவீட்டுக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் அவரை வயநாடு தொகுதியில் வெற்றி பெற வைப்பது தங்கள் கடமை என்றும் பலர் பதிவு செய்து வருகின்றனர்.