விஜயகாந்தை சந்தித்த டி.ராஜேந்தர்: ஏன் தெரியுமா?
தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடந்த சில நாட்களில் ரஜினி, மு.க.ஸ்டாலின் உள்பட் பல பிரபலங்கள் சந்தித்த நிலையில் நேற்று நடிகர், இயக்குனர் டி.ராஜேந்தர் சந்தித்தார்.
விஜயகாந்த் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது தனது மகன் குறளரசன் திருமண பத்திரிகையை டி.ராஜேந்தர் விஜயகாந்திடம் அளித்து திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதுகுறித்து விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
இயக்குநர்-இசையமைப்பாளர்-நடிகர்-சகோதரர் விஜய.T. ராஜேந்தர் அவர்கள், எனது இல்லத்தில் மகன் குறளரசன் அவர்களின் திருமண அழைப்பிதழை வழங்கினார். திரையுலகில் இருவரும் இணைந்து பயணித்த நாட்களை நினைவுகூர்ந்தோம்.
குறளரசன் இல்லறம் சிறக்க எனது வாழ்த்துக்கள்.#டிராஜேந்தர் |#சிம்பு | #குறளரசன் pic.twitter.com/8fxPyOocc3— Captain Vijayakant (@iVijayakant) April 5, 2019