விவசாயிகள் யாரும் கடன்களை செலுத்த வேண்டாம்: கார்த்திக் சிதம்பரம்
இன்னும் 2 மாதம் விவசாயிகள் யாரும் கடன்களை செலுத்த வேண்டாம் என்றும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் சிவகெங்கை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும் முன்னால் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும் காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை அமல்படுத்தி குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கார்த்தி சிதம்பரம் வாக்குறுதி அளித்துள்ளார்.
வாங்கிய கடனை கட்ட வேண்டாம் என ஒரு முன்னாள் நிதியமைச்சரின் மகனே கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.