மதுக்கடைகளை மூடிலால் வருமானத்திற்கு மாற்றுத்திட்டம் என்ன? நீதிமன்றம் கேள்வி
மதுக்கடைகளை மூடினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய தமிழக அரசிடம் திட்டம் ஏதும் உள்ளதா ? என மதுரை உயர்நீதிமன்ற கிளை, தமிழக அரசிடம் கேள்வி கேட்டுள்ளது.
மதுக்கடைகளை படிப்படையாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டாஸ்மாக் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்க மறுத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, ‘மதுக்கடைகளை மூடினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய தமிழக அரசிடம் திட்டம் ஏதும் உள்ளதா ? என்றும், இதுகுறித்து தமிழக அரசு ஏப்ரல் 23-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தஞ்சாவூரில் பள்ளியக்கரஹாரம் அருகே மதுக்கடை அமைப்பதை எதிர்த்து மகேந்திரன் என்பவர் பொதுநல வழக்கின் விசாரணையில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது