வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த 2 காங்கிரஸார் கைது

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த 2 காங்கிரஸார் கைது

சிவகங்கை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட காரைக்குடி அருகே பணப்பட்டுவாடா செய்ததாக காங்கிரஸ் தொண்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகெங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்திற்கு ஓட்டு போடும்படி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக வந்த தகவலை அடுத்து பறக்கும்படை வட்டாட்சியர் சுமதி சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். ஆய்வு செய்தபோது இரண்டு காங்கிரஸார் பணப்பட்டுவாடா செய்ததை பார்த்த அதிகாரி அவர்கள் இருவரையும் கைது செய்ய உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் ரூ.15,500 ரொக்கம் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply