பாலகிருஷ்ணாரெட்டி பிரச்சாரம் செய்ய எதிர்ப்பு

பாலகிருஷ்ணாரெட்டி பிரச்சாரம் செய்ய எதிர்ப்பு

ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த பாலகிருஷ்ணாரெட்டி சமீபத்தில் வழக்கு ஒன்றில் தண்டனை பெற்றதால் அவர் தனது எம்.எல்.ஏ பதவியை இழந்தார்.

இந்த நிலையில் தற்போது ஓசூர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாலகிருஷ்ணாரெட்டி ஓசூர் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது

இந்த முறையீட்டு மனுவை இன்று பிற்பகலில் விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி மணிக்குமார் அமர்வு அறிவித்துள்ளது. இந்த விசாரணையின் முடிவில் என்ன தீர்ப்பு வரும் என்பதை அறிய பாலகிருஷ்ணாரெட்டி ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர்,

Leave a Reply