மோடிக்கு வாக்களிப்பது பாகிஸ்தானுக்கு வாக்களிப்பது போன்றது: காங்கிரஸ்
மோடிக்கு வாக்களிப்பது பாகிஸ்தானுக்கு வாக்களிப்பது போன்றது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்.
மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றால், இந்தியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து இருந்தார்.
இதனை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா, பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக பிரதமர் மோடியுடன் கூட்டு வைத்துள்ளதாகவும், மோடிக்கு வாக்களிப்பது பாகிஸ்தானுக்கு வாக்களிப்பது போன்றது என்றும் அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.