நீட் தேர்வு தேவையில்லை என அதிமுக கூறவில்லை: பியூஷ் கோயல்

நீட் தேர்வு தேவையில்லை என அதிமுக கூறவில்லை: பியூஷ் கோயல்

நீட் தேர்வு தேவையில்லை என அதிமுக கூறவில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னையில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் நீட் தேர்வு தேவையில்லை என்று கூறி வருகிறது. அதிமுகவும் கொள்கை அளவில் நீட் தேர்வை எதிர்ப்பதாகவும் தெரிவித்து வந்தது

இந்த நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னையில் இன்று பேட்டியளித்தபோது நீட் தேர்வு தேவையில்லை என அதிமுக கூறவில்லை என்றும், நீட் தேர்வை தமிழில் எழுத வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமே வைக்கப்பட்டதாகவும் அதை மத்திய அரசு ஏற்று கொண்டதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply