சென்னையில் பிரபலமாகி வரும் ஸ்மார்ட் பைக் திட்டம்:
சுற்றுச்சூழல் மாசு மற்றும் வாகன நெரிசலால் சென்னை திணறிவரும் நிலையில் ஸ்மார்ட் பைக் திட்டத்தை சென்னை மாநகராட்சி செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நகரில் உள்ள 25 இடங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் ஸ்மார்ட் பைக்கை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம். நாம் எந்த பகுதிக்கு செல்ல வேண்டுமோ? அந்த பகுதியின் அருகில் உள்ள ஸ்மார்ட் பைக் நிலையத்தில் சைக்கிளை விட்டுவிட்டு அதற்குரிய வாடகையை செலுத்தலாம்.
இந்த சைக்கிளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஐந்து ரூபாயும், அடுத்த அரை மணி நேரத்திற்கு ஒன்பது ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த பைக்கை அனைவரும் பயன்படுத்துவதன் மூலம் உடலுக்கும் பயிற்சி கிடைப்பதோடு, சுற்றுச்சுழல் மாசுபடுவதும் தவிர்க்கப்படுகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் smart bike என்னும் புது திட்டம் எடப்பாடி அரசால் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.. ஒரு மணி நேரத்திற்கு வாடகையாக 5 ரூபா தான்.. தமிழகம் முழுவதும் இந்த திட்டம் பரவினால் அருமையாக இருக்கும்… pic.twitter.com/2EEoLOMHla
— Mohan G Kshatriyan (@mohandreamer) April 14, 2019