புதுச்சேரி முழுவதும் மூடப்பட்ட மதுக்கடைகள்: குடிமகன்கள் அவதி!
புதுச்சேரியில் நேற்று இரவு 10 மணியுடன் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டது. ஏப்ரல் 18-ம் தேதி வரை அனைத்து வகையான மதுக்கடைகள் & சாராயம்-கள்ளுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மூடப்பட்ட கடைகளை திறந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலால்துறை துணை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல் தமிழகத்திலும் இன்று முதல் அதாவது ஏப்ரல் 16, 17, 18 ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் தொடர்ந்து டாஸ்மாக் மூடப்பட உள்ளதால், மதுப்பானம் வாங்க நேற்றிரவு கடை முன் ஏராளமானோர் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது