அமமுகவினர் 150 பேர் மீது வழக்குப்பதிவு
ஆண்டிபட்டியில் உள்ள அமமுக அலுவலத்திற்கு சோதனைக்கு வந்த அதிகாரிகளை பணிசெய்யவிடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்ததாக அமமுகவினர் 150 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பணப்பட்டுவாடா நடப்பதாக வந்த தகவலின் பேரில் சோதனை நடத்த வந்த போலீசை தடுத்ததால் நள்ளிரவு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் கனிமொழி வீட்டிலும் அமமுக அலுவலகத்திலும் சோதனை நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது