கான்பூரில் ரயில் தடம்புரண்டு 5 பேர் காயம்
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து டெல்லி சென்ற பூர்வா விரைவு ரயில் கான்பூர் அருகே ரூமா என்ற கிராமத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாது. இந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளிவந்துள்ளது
ரயில் விபத்து குறித்த தகவல் தெரிந்தவுடன் மீட்புப்படையினர் சம்பவ இடத்தை நோக்கி விரைந்துள்ளனர். பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு விரைவில் செய்யப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது