மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 பேர் சஸ்பெண்ட்

மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 பேர் சஸ்பெண்ட்

மதுரையில் வாக்கு எண்ணும் மையத்தில் மர்ம நபர்கள் நுழைந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கலால் வரி வட்டாட்சியர் சம்பூர்ணத்தை பணியிடை நீக்கம் செய்த நிலையில் தற்போது மேலும் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த கலால் வரி ஆவணப்பதிவு எழுத்தர் சீனிவாசன், மதுரை மாநகராட்சி மண்டல அதிகாரிகள், ராஜபிரகாஷ், சூரியபிரகாஷ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 4 பேரும் மதுரையில் வாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்தது தொடர்பாக மதுரை மேற்கு தொகுதி உதவி தேர்தல் அலுவலர் குருசந்திரனிடம் விளக்கம் கேட்டு மதுரை ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Leave a Reply