இலங்கையில் நாளை துக்க தினம்: அதிபர் சிறிசேனா அறிவிப்பு

இலங்கையில் நாளை துக்க தினம்: அதிபர் சிறிசேனா அறிவிப்பு

இலங்கையில் நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில் இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை துக்க தினமாக அனுசரிக்கப்படும் என இலங்கை அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.

மேலும் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்த இலங்கை அதிபர் சிறிசேனா மீண்டும் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளார்.

இலங்கையில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டதே இந்த நடவடிக்கைக்கு காரணம் என கூறப்படுகிறது

Leave a Reply