விஜய்யின் 63-வது படத்தின் படப்பிடிப்பில் விபத்து!

விஜய்யின் 63-வது படத்தின் படப்பிடிப்பில் விபத்து!

நடிகர் விஜய்யின் 63-வது படத்தின் படப்பிடிப்பில் 100 அடிக்கு மேல் வைக்கப்பட்டிருந்த ஃபோக்கஸ் லைட் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பின் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

படப்பிடிப்புக்காக வைக்கப்பட்டிருந்த ஃபோக்கஸ் லைட் தவறி விழுந்ததில் கீழே நின்று கொண்டிருந்த மின் பணியாளர் செல்வராஜ் என்பவர் படுகாயம் அடைந்தார். உடனே படுகாயமடைந்த செல்வராஜை படக்குழுவினர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது செல்வராஜ் குணமாகி வருவதாக கூறப்படுகிறது

Leave a Reply