கும்பகோணம் நாகேஸ்வரர் சன்னதி மீது சூரிய கதிர்கள்: அரிய நிகழ்வு

கும்பகோணம் நாகேஸ்வரர் சன்னதி மீது சூரிய கதிர்கள்: அரிய நிகழ்வு

கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரர் கோவில் மிகவும் புகழ் பெற்றது என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்வதுண்டு

இந்த நிலையில் நாகேஸ்வரர் சன்னதி மீது சூரிய கதிர்கள் விழும் அரிய நிகழ்வை காண அதிகாலையிலேயே பக்தர்கள் குவிய தொடங்கினர்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அதாவது ஏப்ரல் மாதம் 24, 25, 26 ஆகிய தேதிகளில் சூரிய கதிர்கள், நாகேஸ்வர சிவலிங்கத்தின் மீது விழும் அதிசய நிகழ்வு நடப்பதுண்டு. இந்த நிகழ்வு மன்னர்கள் காலத்தில் இருந்து பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.

சூரிய கதிர்கள் லிங்கத்தின் மீது விழுந்ததை அடுத்து சூரிய பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply