குழந்தை விற்பனை விவகாரம்; கைது செய்யப்பட்ட 2 பேர் சஸ்பெண்ட்

குழந்தை விற்பனை விவகாரம்; கைது செய்யப்பட்ட 2 பேர் சஸ்பெண்ட்

ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதாக சமீபத்தில் வெளியான அதிர்ச்சி தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வங்கி அலுவலக உதவியாளர் ரவிச்சந்திரன், கொல்லிமலை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் ஆகியோர் இந்த குழந்தை விற்பனை விவகாரத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிய வந்தது. இதனையடுத்து இவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குழந்தை விற்பனை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமுதவள்ளி கணவர் ரவிச்சந்திரன் மீதும் வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply