வண்டலூர் அருகே கட்டப்படும் புதிய பேருந்து நிலையத்தை எதிர்த்து வழக்கு!
சென்னையை அடுத்த வண்டலூர் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்படும் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தால் நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது
இந்த நிலையில் நில உச்சவரம்பின்கீழ் கைப்பற்றப்பட்ட நிலத்தை பொதுப்பயன்பாட்டிற்கு வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
சென்னை, பேருந்து நிலையம் ,கிளாம்பாக்கம், மனுதாக்கல்