என் உயிர் போகும்போது இதனை செய்யுங்கள்: ஓபிஎஸ் உருக்கம்
துணை முதல்வர் ஓபிஎஸ் பாஜகவுக்கு சென்றுவிடுவார் என்று கூறப்படும் நிலையில் உயிர்போகும் நாளில் அதிமுகவின் கொடி என் உடலில் போர்த்துவதே என் வாழ்நாள் பெருமை, லட்சியம் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உருக்கமாக கூறியுள்ளார்.
மேலும் நான் பாஜகவிற்கு செல்கிறேன் என்பது போன்ற அவதூறு கருத்துகள் எல்லாம் வடிகட்டிய பொய் என்றும், என் மீது பரப்பப்படும் அவதூறுகளை மக்களும் அதிமுக தொண்டர்களும் ஏற்கமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தர்.