பரிசு பெட்டிக்குப்பதில் சிறைக்கதவுகளை சின்னமாக பெறலாமே? தமிழிசை கிண்டல்
அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘அதிமுக கொடியின் நடுவில் காவியை சேர்த்து கொள்ளட்டும்’ என்று கிண்டலுடன் கூறினார்.
இதற்கு இன்று பதிலடி கொடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், ‘டிடிவி தினகரன் கட்சி அமமுக தேர்தல் சின்னமாக பரிசு பெட்டிக்குப்பதில் பெங்களூர் சிறைக்கதவுகளை சின்னமாக கேட்டுபெறலாமே? என்று கிண்டலடித்துள்ளார்.
டிடிவி தினகரன் கட்சி அமமுக தேர்தல் சின்னமாக பரிசு பெட்டிக்குப்பதில் பெங்களூர் சிறைக்கதவுகளை சின்னமாக கேட்டுபெறலாமே? https://t.co/yPJgw1jOcr
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) May 1, 2019