சிபிஎஸ்சி தேர்வில் ச95% மார்க் எடுத்த சலவை தொழிலாளியின் மகள்
லக்னோவை சேர்ந்த நிதி கன்னவுஜியா என்ற சலவைத் தொழிலாளியின் மகள், சமீபத்தில் வெளியான சி பி எஸ் சி 12ம் வகுப்புத் தேர்வில் 95% மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இந்தி கன்னவுஜியா தனது குடும்ப சூழ்நிலையே இந்த சாதனை செய்ய காரணமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.ஏ.எஸ் அதிகாரியாவது தான் தனது கனவு என்று நிதி கன்னவுஜியா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்..