சென்னையில் நள்ளிரவில் மின்வெட்டு:
சென்னையில் நள்ளிரவில் மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அண்ணாசாலை பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கொண்டாலும் போதுமான விளக்கம் கொடுப்பதில்லை என கூறி நள்ளிரவில் அப்பகுதி மக்கள் அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை அடுத்து மக்கள் போராட்டதை கைவிட்டு கலைந்து சென்றனர்.