ஆதார் அட்டையில் முகவரியை மாற்ற வேண்டுமா? இதோ ஒரு எளிய வழி!
ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்ட நிலையில் இந்த ஆதார் அட்டையில் முகவரி உள்பட ஏதாவது ஒரு மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அது ஒரு மிகப்பெரிய வேலையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆதாரில் முகவரி மாற்ற புதிய வசதிமுறை ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி முகவரி சான்று இல்லையென்றாலும் ,முகவரியில் மாற்றங்கள் செய்யும் புதிய வசதியை இந்திய தனி அடையாள ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த சேவையின் கீழ் முகவரியை திருத்தவும் இதுகுறித்து மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ளவும் பொதுமக்கள் https://uidai.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது