சென்னையில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆட்டோ ஓட்டுனர் கொலை!
சென்னையில் சுபலட்சுமி என்ற மைனர் பெண்ணுக்கு அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முயற்சித்த நிலையில் அவரது திருமணத்தை ஆட்டோ டிரைவர் ஜெயசீலன் என்பவர் தடுத்து நிறுத்தியதால், ஆத்திரம் அடைந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ஆட்டோ டிரைவரை கொலை செய்தது
கொலை செய்யப்பட ஜெயசீலனுக்கு பிரிசில்லா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர் என்பதும் மகள் ஷீபா ராணிக்கு கடந்த 10 ஆம் தேதி தான் திருப்பதியில் திருமணம் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜெயசீலனை கொலை செய்த கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.