திமுகவில் இணைய தமிழக பாஜகவின் பெண் தலைவர் விருப்பம்: மு.க.ஸ்டாலின் போட்ட குண்டு
திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து தமிழக பாஜகவின் பெண் தலைவர் ஒருவர் தனது தந்தை மூலமாகப் பேசியது உண்மை. என்றும், திமுகவில் இணைய எவருக்கும் தடையில்லை என்றும், அவ்வாறு அந்த பெண் தலைவர் திமுகவுக்கு வந்தால் வரவேற்போம் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், மு.க.ஸ்டாலின் ராகுல்காந்தியை பிரதமர் என்று சொல்லிக்கொண்டு, மூன்றாவது அணியிலும் பேசி வருவதோடு, பாஜகவுக்கு ஆதரவு கொடுக்க பிரதமரிடம் பேசியுள்ளதாக கூறினார். இதனை மறுத்த மு.க.ஸ்டாலின், தற்போது திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து தமிழக பாஜகவின் பெண் தலைவர் ஒருவர் தொடர்பு கொண்டதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது