மீனம்பாக்கத்தில் நெருக்கடி! தாம்பரத்தில் இருந்து விமானங்களை இயக்க திட்டம்

மீனம்பாக்கத்தில் நெருக்கடி! தாம்பரத்தில் இருந்து விமானங்களை இயக்க திட்டம்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அதிக விமானங்கள் வந்து போவதால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க தாம்பரத்தில் இருந்தும் சிறிய விமானங்களை இயக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து தினமும் சுமார் 470 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நாள் ஒன்றுக்கு 70 முதல் 80 சிறிய விமானங்களும் வந்து செல்கின்றன. இந்த நிலையில் மீனம்பாக்கத்திற்கு வரும் சிறிய விமானங்களை மட்டும் தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து இயக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு சிறிய விமானங்களை தாம்பரத்தில் இருந்து இயக்கினால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நெருக்கடி குறையுமென்பது அதிகாரிகளின் கருத்தாக உள்ளது.. இதுகுறித்து விமான போக்குவரத்து கட்டுபாட்டு அலுவலகம், விமான நிறுவனங்கள், இந்திய விமானப்படை ஆகியவற்றுடன் ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது

Leave a Reply