மோடி குறித்து நான் சொன்னது சரிதான்: மணிசங்கர் அய்யர்

மோடி குறித்து நான் சொன்னது சரிதான்: மணிசங்கர் அய்யர்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பிரமதர் மோடி குறித்து கருத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பிரதமர் மோடி இழிவான மனிதர் என்ற பொருளில் நீச் ஆத் மின் என்று தான் கூறியது சரிதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் கருத்து தெரிவித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மேலும், தரக்குறைவான வார்த்தைகளைப் பேசும் மனிதர் மோடி என்றும் மணிசங்கர் அய்யர் இணையதளத்தில் எழுதியுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மணிசங்கர் அய்யர், பிரதமர் மோடி இழிவான மனிதர் என்று கூறியதற்காக அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், ஆங்கில இணையதளங்களில் மணிசங்கர் எழுதிய கட்டுரையில், தான் முன்பு கூறிய மோடி இழிவான மனிதர் எனும் கருத்தை நியாயப்படுத்தி எழுதி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply