ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது: ஜூன் ஒன்றாம் தேதி முதல் அமல்
வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் வழங்கக் கூடாது என்று நொய்டாவில் புதிய உத்தரவு அமலாகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய நகரங்களில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்டி வருவோருக்கு மட்டுமே பெட்ரோல் தரவேண்டும் என்று பெட்ரோல் பங்குகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வருவோரின் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்படும் என்றும், ஹெல்மெட் அணியாமல் வந்துவிட்டு, பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் தகராறு செய்தால் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, பெட்ரோல் பங்குகளில், தரமான சிசிடிவி கேமராக்களை பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.