இந்த காலத்திலும் இப்படி ஒரு உண்மையான காதலா?
உண்மையான காதல் தற்காலத்தில் குறைந்துவிட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதில் மணப்பெண் சுயநினைவின்றி ஸ்ட்ரக்சரில் கொண்டு வரப்படுகிறார். அந்த ஸ்ட்ரக்சரை மணமகனே தள்ளி கொண்டு வருகிறார். வாழ்நாள் முழுவதும் தனது காதலியால் நடக்க முடியாது என்று தெரிந்தும் அந்த பெண்ணையே திருமணம் செய்வேன் என்று உறுதியுடன் நின்று பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
மேலும் மணமேடைக்கு அவரே தன்னுடைய காதலியை ஸ்ட்ரெக்சரில் தள்ளி கொண்டு சென்றார். உண்மையான இந்த காதலுக்கு ஈடு இணை வேறு உண்டா?